ADDED : பிப் 12, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : தீர்த்தாம்பாளையம் கிராமத்தில், மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் துண்டு பிரசுரம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். தொழிற்பிரிவு மாவட்ட த் தலைவர் ராகேஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் தலைவர் மருதை பங்கேற்று, பொதுமக்களிடம், 'வேண்டும் மோடி மீண்டும் மோடி' என்பதை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், ராணுவ பிரிவு மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத் தலைவர் வடமலை தமிழ், இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் சந்தோஷ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிளை தலைவர் ஆறுமுகம், நன்றி கூறினார்.