/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ.,வினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
/
பா.ஜ.,வினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ADDED : அக் 16, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பிரதமர் மோடி பற்றி அவதுாறாக பேசிய வி.சி., கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட தலைவர் மனு அளித்தார்.
இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., தமிழழகன் நிர்வாகிகளுடன் சென்று அளித்த மனு: பிரதமர் மோடி, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி மதுரையைச் சேர்ந்த வி.சி., கட்சி பிரமுகர் கனி என்பவர், பொதுக் கூட்டத்தில் அவதுாறாக பேசி, வன்முறையை துாண்டி ஜாதி, மோதலை உருவாக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். எனவே, கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.