/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., ஆர்ப்பாட்டம் எதிரொலி கடலுாரில் சாட்டை தட்டுப்பாடு
/
பா.ஜ., ஆர்ப்பாட்டம் எதிரொலி கடலுாரில் சாட்டை தட்டுப்பாடு
பா.ஜ., ஆர்ப்பாட்டம் எதிரொலி கடலுாரில் சாட்டை தட்டுப்பாடு
பா.ஜ., ஆர்ப்பாட்டம் எதிரொலி கடலுாரில் சாட்டை தட்டுப்பாடு
ADDED : டிச 27, 2024 06:26 AM
கடலுார்: பா.ஜ.,வின் சாட்டையடி ஆர்ப்பாட்டம் எதிரொலியாக, கடலுாரில் சாட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் இன்று (27ம் தேதி) காலை 10:00 மணிக்கு தன்னைத் தானே சாட்டையால் அடித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், அவர் கூறியுள்ளார்.
அதன்படி, கடலுாரில் தலைமை தபால் நிலையம் அருகில் மதியம் 2:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பா.ஜ.வினர் அதிகளவில் சாட்டைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக முதுநகர் பகுதியில் சாட்டைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.