/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரத்ததானம்
/
மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரத்ததானம்
ADDED : ஜன 26, 2025 04:35 AM
சிதம்பரம் : கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நல சங்கம் சார்பாக, அகில இந்திய மருந்து வணிகர் சங்க தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததானம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட பொருளாளர் சுகுமார் தலைமையில் ரத்ததான நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மருந்து வணிகர்கள் நலச்சங்க செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமையில் 75 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. ரத்த வங்கியின் மருத்துவ கண்காணிப்பாளர் வள்ளுவன் தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர் நடராஜ் மற்றும் செந்தில்குமார், செவிலியர் செபஸ்டின், அனிதா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் ரத்ததானம் பெற்றனர். மருந்து வணிக மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், மருந்து விற்பனை பிரதிநிதி தலைவர் மோகன்ராஜ், உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர். சிதம்பரம் நகர மருந்து வணிக செயலாளர் பலராமமுருகன். பொருளாளர் கண்ணன் அரிமா சங்கத் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.