
கடலுார்; கடலுார் அரசு ஐ.டி.ஐ., யில், நேரு யுவ கேந்திரா சார்பில் காந்தி நினைவு தினம் மற்றும் தியாகிகள் தின ரத்த தான முகாம் நடந்தது.
கடலுார் அரசு ஐ.டி.ஐ., துணை இயக்குனர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட ரத்த பரிமாற்று குழு அலுவலர் குமார் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். கடலுார் பொறுப்பாளர் வனிதா வரவேற்றார். இதில், காந்தி உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் பரமேஸ்வரி, ரத்த வங்கி டாக்டர் வினோத், ஏ.ஆர்.டி., டாக்டர் ஸ்ரீதரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
மருந்தாளுனர்கள் சுதா, மீரா, செவிலியர்கள் ஜோஸ், பிரியா, ஆய்வக நிபுணர் தேவநாதன், ஆலோசகர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு யுவ கேந்திரா ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.