ADDED : அக் 09, 2025 11:32 PM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கி ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
துறை தலைவர்கள் சரவணன், சிற்றரசு, தேவநாதன், செந்தில்குமார், நூலகர் நடராஜன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் குமராட்சி, சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிவகாமி, நர்மதா, ஷியாமளா மற்றும் மருத்துவ பணியாளர்கள் குழுவினர் பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் ரத்ததானம் பெற்றனர்.
டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பூபாலன் நன்றி கூறினார்.