/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெ.பொன்னேரியில் நிழற்குடை இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
/
பெ.பொன்னேரியில் நிழற்குடை இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
பெ.பொன்னேரியில் நிழற்குடை இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
பெ.பொன்னேரியில் நிழற்குடை இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 09, 2025 11:33 PM
பெண்ணாடம்: பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என இரு மாவட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி பெ.பொன்னேரி மற்றும் அரியலுார் மாவட்டம், சிலுப்பனுார், சேந்தமங்கலம், செங்கமேடு, மதுராநகர், ஈச்சங்காடு, தளவாய் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள நிழற்குடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை கட்டவில்லை. விரைவில் மழை காலம் துவங்கும் நிலையில் நீண்ட துார கிராமங்களில் இருந்து பஸ் ஏற வரும் பயணிகள் மழை, வெயிலில் கால்கடுக்க நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளது.
எனவே, பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.