/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
/
அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
ADDED : அக் 03, 2024 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது.
முகாமிற்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
குடும்ப நலம் துணை இயக்குநர் பாலகுமார் சிறப்புரையாற்றினார். எஸ்.பி., ராஜாராம் மற்றும் 50 தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்கினார். அப்போது, நிலைய மருத்துவ அலுவலர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமை ரத்த வங்கி டாக்டர் குமார் ஒருங்கிணைத்தார்.