நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்விற்கு, மண்டல ஒருகிங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வேளாண்புல தாவர நோயியல் துறை முத்துக்குமார், சிறப்பு அலுவலர்கள் செந்தில்நாதன், ராமச்சந்திரன், கண்ணன், வேளாண் புல முதன்மையர் முதல்வர் அங்கயற்கண்ணி, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் சுந்தரேசன், ரத்த வங்கி மருத்துவர் வள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலைக்கழக வேளாண்புல மாணவ, மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.