/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கல்
/
ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கல்
ADDED : செப் 14, 2025 08:00 AM

வேப்பூர் : நல்லுார் அரசு வட்டார மருத்துவமனைக்கு ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் ரோட்டரி கிளப் மற்றும் நல்லுார் � பாலாஜி மேல்நிலை பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். நல்லுார் அரசு வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், ரோட்டரி கிளப் உறுப்பினர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அலுவலர் சிங்கத்தமிழன், மேற்பார்வையாளர் நாட்டுத்துரை, செவிலியர் லலிதா, உதவியாளர் அபிபுல்லா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். வட்டார மருத்துவமனைக்கு 5 ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டது.