ADDED : அக் 25, 2026 02:28 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அரிமா சங்கமும்,த.மு.மு.க.வும் இணைந்து நடத்திய முகாமிற்கு, த.மு.மு.க., மருத்துவணி செயலாளர் அசன்அலி தலைமை தாங்கினார். முகாமில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. அரிமா வட்டார தலைவர் ரவிசங்கர், பொருளார் ஸ்ரீதர், த.மு.மு.க., துணைத்தலைவர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
