ADDED : ஆக 18, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் முதுநகர் அருகே ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கடலுார் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்,48; இவருக்கு சொந்தமான மீன்பிடி படகு கடலுார் துறைமுகம் பரவனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை படகு திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
இதில், படகு மற்றும் மீன்பிடி வலை சேதமானது. கடலுார் துறைமுகம் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.