/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுடுகாடு வெள்ளத்தில் மூழ்கியதால் சாலையோரம் எரிக்கப்பட்ட சடலம்
/
சுடுகாடு வெள்ளத்தில் மூழ்கியதால் சாலையோரம் எரிக்கப்பட்ட சடலம்
சுடுகாடு வெள்ளத்தில் மூழ்கியதால் சாலையோரம் எரிக்கப்பட்ட சடலம்
சுடுகாடு வெள்ளத்தில் மூழ்கியதால் சாலையோரம் எரிக்கப்பட்ட சடலம்
ADDED : டிச 16, 2024 04:42 AM

சிதம்பரம் : குமராட்சி அருகே சுடுகாடு வௌ்ள நீரில் மூழ்கியதால், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் இறந்தவர் உடலை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனமழை காரணமாக, கடலுார் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல கிராமங்களில் சுடுகாடுகள் வெள்ள நீரில் மூழ்கின.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமராட்சியை சேர்ந்த ராஜகுமாரி என்ற மூதாட்டி இறந்தார். அப்பகுதி சுடுகாடு வௌ்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், நேற்று காலை மூதாட்டியின் உடல், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் தகனம் செய்யப்பட்டது.
இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்து கடந்து சென்றனர்.
அதே சமயத்தில் குமராட்சியில் மேலும் ஒருவர் இறந்ததால், அவரது உடலை ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள வனத் தோட்டத்தில் வைத்து எரித்தனர்.