/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் உடல் ஒப்படைப்பு
/
வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் உடல் ஒப்படைப்பு
வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் உடல் ஒப்படைப்பு
வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்த வாலிபர் உடல் ஒப்படைப்பு
ADDED : நவ 11, 2025 06:30 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வந்தே பாரத் ரயிலில் சிக்கி இறந்தவரின் முகவரி தெரிந்ததால், அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை - நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், நேற்று முன்தினம் காலை 7:40 மணியளவில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனை கடந்து, மணலுார் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றது.
அப்போது, 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ரயிலில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தொடர் விசாரணையில், இறந்தவர் விருத்தாசலம் மறைமலை நகரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், 37; என்பதும், குடி பழக்கத்திற்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.
ரயில்வே போலீசார் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.