/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருளக்குப்பம் பகுதியில் குளம் துார்வாரும் பணி
/
இருளக்குப்பம் பகுதியில் குளம் துார்வாரும் பணி
ADDED : நவ 11, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி 32வது வார்டு இருளக்குப்பம் பகுதியில் வெள்ளை குளம் துார்வாரும் பணி துவங்கப்பட்டது.
பண்ருட்டி நகராட்சி 32 வது வார்டு இருளக்குப்பம் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் வெள்ளைக் குளம் துார்வாரும் பணி நேற்று துவங்கியது. நகராட்சி கமிஷ்னர் காஞ்சனா முன்னிலை வகித்தார்.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பூமி பூஜையை பணியை துவக்கி வைத்தார்.
உதவி பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் அருள் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

