ADDED : நவ 11, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மகள் காணவில்லை என தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திட்டக்கு டி அடுத்த திருவட்டத்துறையைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மகள் மகேஸ்வரி, 19; இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8ம் தேதி உடல்நிலை சரியில்லை எனக்கூறிய தனது மகளை கல்லுாரியில் இருந்து திருமூர்த்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று இரவு வீட்டில் துாங்கிய மகேஸ்வரி, காலையில் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

