/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுப்பாளையம் மெயின்ரோட்டில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
/
புதுப்பாளையம் மெயின்ரோட்டில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
புதுப்பாளையம் மெயின்ரோட்டில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
புதுப்பாளையம் மெயின்ரோட்டில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
ADDED : நவ 11, 2025 06:26 AM

கடலுார்: கடலுார் புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் கடந்த ஒருவாரமாக வெளியேறி வருவதால் வியாபாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார் புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. மாநகராட்சி இதை கண்டும் கணாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் கடை நடத்தும் வியாபாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
பல இடங்களில் இதுபோன்ற பிரச்னை இருப்பதால் பீச் ரோட்டில் ராட்சத பம்ப் செட் வைத்து பாதாள சாக்கடை கழிவுநீரை சாதாரண கால்வாயில் வெளியேற்றி வருகின்றனர்.
பாதாள சாக்கடை மேன்ஹோலில் ஏற்பட்டுள்ள அடைப்பை கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.