/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : நவ 11, 2025 06:25 AM

கடலுார்: காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி பேச்சு போட்டி, கட்டுரை, கவிதை போட்டி நடந்தது. கல்லுாரி மாணவர்களுக்கு 15ம் தேதி போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
பேச்சுப் போட்டியில் பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000; பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் வெற்ற 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 2000 வீதம் மொத்தம் 16 மாணவர்களுக்கு ரூ. 48 ஆயிரம் பரிசுதொகை வழங்கப்பட்டது.
மேலும், மாவட்ட அளவிலான மற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 என 9 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 66 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுப்புலெட்சுமி, துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.

