/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சடலம் சிதைந்த நிலையில் உடல் மீட்பு
/
சடலம் சிதைந்த நிலையில் உடல் மீட்பு
ADDED : நவ 02, 2025 03:35 AM
மந்தாரக்குப்பம்: வெள்ளை துணியால் கட்டப்பட்டிருந்த சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊமங்கலம் அடுத்த முதனை சுடுகாடு அருகே ஒரு சடலம், வெள்ளை துணியால் கட்டப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஊமங்கலம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விழுப்புரம் தடவியல் துறை நிபுணர் சுரேஷ் உடலை தீவிர ஆய்வு செய்தார். அதில் உடல் முழுதும் கட்டப்பட்டிருந்த வெள்ளை துணியை அகற்றி பார்த்த போது ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், 45 வயது மதிக்கதக்க ஆண் பிரேதம் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து சிதைந்து இருந்த எலும்பு கூடாக இருந்த சடலத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஊமங்கலம் போலீசார் இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

