/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்
/
வேன் கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்
ADDED : நவ 02, 2025 03:35 AM
குறிஞ்சிப்பாடி: வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் காயம் அடைந்தனர்.
நெய்வேலி பகுதியில் இருந்து பிச்சாவரத்திற்கு சுற்றுலா செல்வதற்காக, வேன் ஒன்று நேற்று காலை கிளம்பியது. குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை பொட்டவெளி கிராமத்தில், காலை 10:30 மணி அளவில் சாலையில் வேன் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த , 4 குழந்தைகள் உட்பட, 19 பேர் விபத்தில் காயமடைந்தனர்.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

