/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 02, 2025 03:34 AM
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் விமான ராஜ கோபுரங்கள், மகா மண்டபம் உள்ளிட்டவை 30 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்ட நிலையில், நாளை காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.முன்னதாக, ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப்பந்தலில் கடந்த அக்., 30ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் துவங்கி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் திருப்பணிக் கான ஏற்பாடுகளை மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும் பத்தினர் கும்பாபிே ஷக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சுதர்சனன், சவுந்தரராஜன், திருவேங்கடவன் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

