sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விருத்தாசலம் தபால் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

/

 விருத்தாசலம் தபால் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

 விருத்தாசலம் தபால் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

 விருத்தாசலம் தபால் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை


ADDED : மார் 10, 2026 04:58 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் தபால் நிலையத்தில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருச்சி மாவட்டம், மேலப்புதுார், சங்கிலியாண்டபுரம் பகுதியில் மண்டல தபால் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல அலுவலக பணிகள் துவங்கிய நிலையில், இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட கடலுார், பெரம்பலுார், அரியலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் தலைமை தபால் நிலையங்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று இரவு 7:00 மணியளவில், மாவட்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

மோப்ப நாய் லியோ உதவியுடன் பார்சல்கள், பீரோ, டேபிள், பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் மேல் தளத்தில் உள்ள தனியார் சிட்பண்ட் ஆகியவற்றில் சோதனை செய்தனர். 50 நிமிடங்கள் சோதனை நடத்திய குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என உறுதியானதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

விருத்தாசலம் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us