/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தக கண்காட்சி : கடலுாரில் 22ல் துவக்கம்
/
புத்தக கண்காட்சி : கடலுாரில் 22ல் துவக்கம்
ADDED : மார் 19, 2025 11:55 PM
கடலுார் : கடலுாரில் பள்ளி கல்வித்துறை சார்பில் வரும் 22ம் தேதி முதல் 31ம் தேதிவரை புத்தக கண்காட்சி நடக்கிறது.
துவக்க விழாவிற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் முன்னிலை வகிக்கின்றனர். பேராாசிரியர்கள் பர்வீன் சுல்தானா, ராஜாராம் சிறப்புரையாற்றுகின்றனர்.
வரும் 23ம் தேதி டாக்டர் சிவராமன், 24ம் தேதி புலவர் சண்முக வடிவேல், தணிகைவேலன் ஆகியோர் பட்டிமன்றமும், 25ம் தேதி கவிதா ஜவகர், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கோபிநாத் பேசுகின்றனர்.
26ம் தேதி கவிஞர் அறிவுமதி சங்க தமிழில் இசை அழகுகள் என்ற தலைப்பில் பேசுகிறார். 31ம் தேதி நிறைவு விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசுகிறார்.
தினமும் கலை நிகழ்ச்சிகள், சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.