ADDED : மார் 29, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் புத்தக திருவிழாவில் நடந்த உள்ளூர் படைப்பாளர்களின் நுால் வெளியிடப்பட்டது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த 22ம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடக்கிறது. இதில் உள்ளூர் படைப்பாளர்களின் புதிய நுால் வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்களின் கடலுார் சங்க கவுரவ தலைவர் குமாரசாமி எழுதிய 'நாம் அறிய வேண்டிய 100 விஷயங்கள்' என்ற தலைப்பிலான நுால் வெளியிடப்பட்டது.
பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா வெளியிட, முதல் பிரதியை நுாலாசிரியரின் மனைவி வசந்தி பெற்றுக்கொண்டார்.
விழாவில் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட மைய நுாலக முதல்நிலை நுாலகர் கணேசன், ஓய்வூதியர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.