ADDED : ஜூலை 18, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் செந்தமிழ் இலக்கிய பேரவை சார்பில், தமிழ் ஞாயிறு கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
செந்தமிழ் இலக்கிய பேரவை தலைவர் செந்தாமரை தலைமை தாங்கி, விஜயா முத்துக்குமாரசாமி எழுதிய தமிழ் ஞாயிறு கவிதை நுாலை வெளியிட்டார்.
முதல் நுாலை சிங்காரம் பெற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி நுாலினை ஆய்வு செய்தார்.
பா.ஜ., முன்னாள் நகர தலைவர் வெங்கடேசன், மாவட்ட தமிழ் சங்க இணை செயலாளர் ஜெகதீசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ஜோதி, ஓய்வு பெற்ற ஊராட்சி உதவிஇயக்குனர் ராம்குமார் வாழ்த்திப் பேசினர்.
நுால் ஆசிரியர் விஜயா முத்துக்குமாரசாமி ஏற்புரையாற்றினார்.
அரசு மருத்துவமனை உதவியாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

