/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எல்லை காளியம்மன் கோவில் செடல் உற்சவம்
/
எல்லை காளியம்மன் கோவில் செடல் உற்சவம்
ADDED : ஜூலை 27, 2025 08:21 AM

கடலுார் : கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்செலுத்தினர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 21ம் தேதி பந்தக்கால் நடுதல், கோ பூஜையுடன் துவங்கியது. 23ம் தேதி இரவு மகா கணபதி ஹோமம், கலச பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சக்தி யாக வேள்வி, மகா சங்கல்பம், தீபாரதனைநடந்தது.
தொடர்ந்து 108 சங்காபிஷேகம், எல்லை காளியம்மனுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 24ம் தேதி, காலை அரசு-வேம்புதிருக்கல்யாணம், இரவு எல்லை காளி அம்மனுக்கு காப்பு கட்டுதல், எல்லை கட்டுதல் நடந்தது.
நேற்றுமுன்தினம் காலை செடல் திருவிழாவையொட்டி வரிசை புறப்பாடு, ஊத்துக்காட்டு மாரியம்மன் பெண்ணையாற்று கரகங்களுடன் வீதி வலம், மதியம்1008 குடநீர் அபிஷேகம் நடந்தது. மாலை தீபாராதனையை தொடர்ந்து செடல் திருவிழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் செடல் போட்டுநேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு புஷ்ப பல்லக்கில் ஊத்துக்காட்டு மாரியம்மன் வீதியுலா நடந்தது.வரும் 1ம் தேதி இரவு உதிரவாய் துடைத்தல் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.