/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 23, 2024 07:18 AM
விருத்தாசலம்: ஆலடி ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி நிதி 10 லட்சம் ரூபாயில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது.
விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில், பொதுமக்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சம் ரூபாயில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
ஊராட்சி தலைவர் பியூலா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., இப்ராஹிம், பொறியாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தே.கோபுராபுரம் ஊராட்சி தலைவர் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, காங்., வட்டார தலைவர் சாந்தகுமார் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.