/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை
/
கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை
ADDED : நவ 08, 2024 05:36 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிமற்றும் காவல்துறை சார்பில் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலைகளில் கால்நடை சுற்றி திரிவதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குபேரூராட்சி சேர்மன் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசுகையில், சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை, மாட்டின் உரிமையாளர்கள் வீட்டில் கட்டி வைக்க வேண்டும் , தெருவில் கால்நடைகளை அவிழ்த்து விடக்கூடாது. சாலையில் உள்ள கால்நடைகளை பேரூராட்சி சார்பில் பிடித்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் அண்ணாமலைநகர் பகுதியைச் சேர்ந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.