ADDED : ஏப் 04, 2025 04:59 AM
கடலுார்: கடலுாரில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் (போட்டா - ஜியோ) அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் செங்கேணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாட்டுத்துரை, தமிழ்நாடு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்டத்தலைவர் தனசங்கு, மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத்தலைவர் நுார்அலி முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில நிதி காப்பாளர் அறிவொளி கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர்.