ADDED : நவ 15, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.
நந்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, பெ.பூவனுார் சுரேஷ், 41, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் 950 ரொக்கம், டி.என். 91 - எகஸ். 6874 பதிவெண் கொண்ட பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.