ADDED : பிப் 21, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, சமட்டிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது.
மதுபாட்டில் விற்ற, சமட்டிக்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்குமரன், 56; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.