/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா பொருட்கள் விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது
/
குட்கா பொருட்கள் விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது
ADDED : அக் 27, 2025 11:38 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று கிளிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தாமோதரன், 48; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செ ய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரனை கைது செய்தனர். மேலும், அவரது கடையில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

