/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி
ADDED : நவ 28, 2024 07:00 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. பி.பி.ஜெ. கல்லூரி தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப் தலைவர் ரவிசுந்தர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சத்யா வரவேற்றார். பல்கலைக்கழக உடற்கல்வி துறை துணை இயக்குனர் வெங்கடாஜலபதி போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 13 கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் 51-54 எடை பிரிவில் பி.பி.ஜெ. கல்லுாரி மாணவர் கிரண் முதல் பரிசு பெற்று தங்கம் வென்றார். இவர், பஞ்சாபில் நடைபெற உள்ள அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றார்.
பெண்களுக்கான 45-48 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் மாணவி நந்தினி மற்றும் 75-80 கிலோ பிரிவில் மாணவர் யுவன்குமார் ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
மேலும,் ஆண்கள் பிரிவுக்கான போட்டிகளில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை அணி ஓவரால் சாம்பியன் பெற்றது.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரி அணி இரண்டாம் பரிசு பெற்றது. பெண்களுக்கான பிரிவில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி முதல் பரிசும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணி இரண்டாம் பரிசும் பெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு உடற்கல்வி இயக்குனர்கள் ராஜமாணிக்கம், இளவரசி, ஜோதிப்பிரியா, பண்பில்நாதன் மற்றும் அனைத்து கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
உடற்கல்வி இயக்குனர் சத்யராஜ் நன்றி கூறினார்.