/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குத்துச்சண்டை போட்டி: தவ அமுதம் பள்ளி சாதனை
/
குத்துச்சண்டை போட்டி: தவ அமுதம் பள்ளி சாதனை
ADDED : டிச 12, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
இதில் ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 10 பேர் தங்கம், 5 பேர் வெள்ளி பதக்கங்கள் வென்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி, ஆரோக்கிய சிலம்பரசி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.