/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளைகாப்புக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
/
வளைகாப்புக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
வளைகாப்புக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
வளைகாப்புக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து சிறுவன் பலி
ADDED : டிச 05, 2024 11:31 PM

திருப்பனந்தாள் : கடலுார் மாவட்டம், நடுவீரன்பட்டியை சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி - சங்கீதா தம்பதி. சங்கீதாவின் தம்பி மனைவிக்கு, திருவாரூரில் நேற்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுடன் வேனில் புறப்பட்டனர். வேனை சேத்தியாப்தோப்பு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 29, என்பவர் ஒட்டினார்.
அந்த வேன், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பை-பாஸ் சாலையில் இருந்து, பட்டம் பாலம் என்ற பகுதியில், அணுகு சாலையில் வந்து கொண்டிருந்த போது, பக்கவாட்டில் வேகமாக வந்த லாரி மோதியதில், வேன் சாலையில் கவிழ்ந்தது. விபத்தில், பார்த்தசாரதி - சங்கீதா தம்பதியின் மகனான லிங்கேஸ்வரன், 5, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், வேனில் பயணம் செய்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது; 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான அபுபக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.