ADDED : மே 15, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பைக் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சுஜித், 13; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பைக் ஒன்று, சிறுவன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் சுஜித், கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.