ADDED : ஜன 19, 2024 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி இறந்தார்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் தனராஜ், 10; இவர், கொத்தட்டை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதி, துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமைடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

