ADDED : ஜன 02, 2025 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; தமிழ்நாடு பிராமணர் சங்க பண்ருட்டி கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்க பண்ருட்டி கிளை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில், சங்க தலைவராக வெங்கடேசன், செயலாளராக கிருஷ்ணகுமார், பொருளாளராக சிவசுப்ரமணியன், துணை தலைவராக சங்கர், மகளிர் அணி தலைவியாக ரமாமோகன், இளைஞர் அணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை சங்க தேர்தலை மோகன் நடத்தினார். உறுப்பினர்கள் ராமு, பிரபாகரன்ராவ், சிவக்குமார், கஸ்துாரிரங்கன் பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.