ADDED : ஏப் 07, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ராமநவமி முன்னிட்டு நிர்வாகிகள் சிறப்புக் கூட்டம் நடந்தது.
சங்க துணைத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். வேங்கடகணபதி, செயலாளர் மணிகண்டன், மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.
கூட்டத்தில்இளைஞரணி செயலாளர் விக்னேஷ், நிர்வாகிகள் சிவராஜன், சண்முகம், ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக ராமநவமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து, தமிழ் புத்தாண்டு புதிய பஞ்சாங்கம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. கவுரவத் தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.