/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓசூர் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ பூஜை
/
ஓசூர் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ பூஜை
ADDED : மார் 18, 2024 04:05 AM
நெல்லிக்குப்பம், : ஓசூர் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் பூஜைகள் நடக்கிறது.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கத்தில் பழமை யான ஓசூர் அம்மன் கோவிலில் பிரம்மேற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிங்கம், பூத நாகம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்து வருகிறது.
நேற்று 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை கோ பூஜை, வடுக, கன்னிகா, சுஹாசினி பூஜைகள் நடந்தன. தம்பதிகள் சமேதராய் தம்பதி பூஜை செய்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு யாகம் செய்து கலசாபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு நாக வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
பூஜைகளை சீனுவாசன், ராதாகிருஷ்ணன் குருக்கள் செய்தனர். சேர்மன் ஜெயந்தி உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். 20ம் தேதி தெருவடைச்சான், 22ம் தேதி திருத்தேர், 23ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.

