ADDED : பிப் 13, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் இன்று (13ம் தேதி) கிள்ளை ரயில்வே கேட் மூடப்படுகிறது.
கிள்ளை ரயில்வே கேட்டில் இன்று (13ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால், காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து கிள்ளை மற்றும் பிச்சாவரம் செல்லும் அனைத்து வாகனங்களும், மாற்று பாதை வழியாக செல்லுமாறு ரயில்வே அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.