காலை உணவு திட்ட மைய சமையல் கூடம்: கலெக்டர் ஆய்வு
காலை உணவு திட்ட மைய சமையல் கூடம்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 09, 2026 04:04 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட குண்டுசாலை பகுதியில் உள்ள காலை உணவு திட்ட மைய சமையல் கூடத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியமாகவும், எந்தவித உடல்சோர்வும் ஏற்படாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் சத்தான உணவினை காலையில் வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வரின் காலை உணவு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி காலை உணவு திட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம், உணவு தயார் செய்யும் இடம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவது, தினசரி பட்டியலில் உள்ள வகையில் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கபடுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டில் காலை உணவுத் திட்டம் முக்கிய பங்கு வகிப்பதால், எந்தவித குறையும் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் கிஷன் குமார், திட்ட இயக்குனர் பாலகணேஷ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
