/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நகர பள்ளிகளில் காலை உணவு திட்டம்
/
சிதம்பரம் நகர பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ADDED : ஆக 26, 2025 11:35 PM

சிதம்பரம் : சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
சிதம்பரம், செட்டியார் பள்ளி மற்றும் டி.இ.எல்.சி., உதவி பெறும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
ராமசாமி செட்டியார் பள்ளி, ராமானுஜ தரிசன தொடக்கப் பள்ளி, குருமூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சற்குருநாதன் பள்ளி, மந்தகரை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி, பெரியார் தெரு டி.இ.எல்.சி., பள்ளி, பச்சையப்பன் பள்ளி, ஆறுமுகநாவலர் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மல்லிகா, துணைத் தலைவர் முத்துக்குமரன், பொறியாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், ஷகிலா இஸ்மாயில், கல்பனா, சுதா, சுந்தரி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், சத்யா ரமேஷ், அருள், ஸ்ரீதர், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.