ADDED : செப் 24, 2024 05:52 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை, அம்மன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த பேரளையூரில் பொன்முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார்.
அதிகாலை 2:00 மணியளவில் கோவிலின் உள்ளே சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் பெரிய சாமி என்பவர் எழுந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மூவர் உண் டிலை உடைத்து, காணிக்கையை திருடிக்கொண்டிருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.
அப்போது மர்ம நபர்கள் பெரியசாமியை தாக்கி விட்டு காணிக்கை, அம்மன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர். அம்மனுக்கு சாத்த வேண்டிய நகைகள் பாதுகாப்பாக இருக்க அதனை உண்டியலில் வைத்துள்ளதாக கிராம முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.