நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு, தலைமை மருத்துவர் லட்சுமி தலைமை தாங்கினார். சாசன தலைவர் முகமது யாசின், சாசன செயலாளர் தீபக்குமார் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அபிராமி செல்வகணபதி தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
70க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு சத்துமாவு, புரதச்சத்து மாவு, பேரிச்சம் பழம் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்கள் கேசவன், ஆறுமுகம், வேதாந்த தேசிகன், வடிவேல், பழனியப்பன், வன்னியநா தன், புத்தநேசன் பங்கேற்றனர். புகழேந்தி நன்றி கூறினார்.