
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு நாள் விழா நடந்தது.
கடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
உதவி ஆளுநர் ஜெய்சங்கர், மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா, குழந்தை நல தலைமை மருத்துவர் செந்தில்குமார், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏழுமலை, நடராஜ், ராசன், கிருஷ்ணன், புஷ்பராஜ், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.