/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை வழக்கில் லஞ்சம் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
/
கொலை வழக்கில் லஞ்சம் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 20, 2024 03:39 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கொலை வழக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் காலனியை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை, கடந்த ஜூன் மாதத்தில் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சித் தலைவர் சுப்ரமணியன் மகன் கலைவாணன், 28, கொலை செய்தார்.
இந்த வழக்கில், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், அவரது மற்றொரு மகன் மணிமாறன் ஆகியோரையும் சேர்க்க கோரி, இறந்த பாக்யராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுப்ரமணியன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் மணிமாறன் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், இவ்வழக்கில் மணிமாறனை சேர்க்காமல் இருக்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், 1.50 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை கேட்டு, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதல் குற்றவாளியான கலைவாணன் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையானார்.
இது குறித்த புகாரின் பேரில், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின் பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.