ADDED : செப் 14, 2026 10:15 PM
சிதம்பரம், செப்.14-
கொத்தனார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம், சின்னதுரை நகர் அடிஅண்ணாமலை கிராம ப குதியை சேர்ந்தவர் ஏழுமலை . 45; கொத்தனார். இவரது மனைவி வேடியம்மாள், 43; இவர்கள் சிதம்பரம் சுப்பிரமணிய படையாட்சி தெருவில், ஒருவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஏழுமலை அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்து, வீட்டிற்கு வந்த ஏழுமலை, மனைவி வேடியம்மாளை சந்தேகப்பட்டு அடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகல் 2 மணியளவில், தான் தங்கியிருந்த வீட்டு மாடியில், ஏழுமலை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறிதது ஏழுமலை மனைவி வேடியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
