தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ களிமண் விநாயகர் சிலைகளுக்கு மவுசு  

களிமண் விநாயகர் சிலைகளுக்கு மவுசு  

களிமண் விநாயகர் சிலைகளுக்கு மவுசு  


ADDED : செப் 14, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 09:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம், செப் 15 –

 களிமண் விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் மத்தியில் மீண்டும் மவுசு கூடியுள்ளது. 

  ஆரம்ப காலத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது,  பொதுமக்கள் களிமண்ணால் செய்த சிலைகளை வைத்துதான் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் ரசாயணம் கலந்த சிலைகள் மற்றும் ரசாயனம் பூசப்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்ய துவங்கினர். இதனால் சுற்றுசூழல் கடும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது

அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ரசாயனம் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, பல்வேறு வகையில் தடைகளும் விதிக்கப்பட்டது.

ரசாயனம் கலந்த சிலைகளை தண்ணீரில் கரைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.அந்த வகையில், தற்போது மீண்டும் களிமண் விநாயகர் சிலைகளுக்கு மவுசு கூடியுள்ளது. நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, சிதம்பரம் மேலவீதியில் பல இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கட்டிருந்தது.

அதே சமயம், வர்ணம் பூசாத களிமண் சிலைகள் விற்பனை செய்யப்பட்டதை, பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் ஆரம்ப காலம் போல் அருகிலேயே, களிமண் கொண்டு விநாயகர் சிலைகள், உடனுக்குடன் செய்து விற்பனை செய்ததால் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us