/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.22.15 கோடியில் பாலம் பணி துவக்கம்
/
ரூ.22.15 கோடியில் பாலம் பணி துவக்கம்
ADDED : பிப் 13, 2024 05:52 AM

கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றில், ரூ. 22.15 கோடியில் மேம்பாலம் அமைகும் பணி துவங்கியது.
மத்திய அரசின் 2022-23ம் ஆண்டு நிதி திட்டத்தில், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.22.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கெடிலம் ஆற்றில் தற்போதுள்ள அண்ணா பாலத்திற்கு மேற்கு பகுதியில், புதிய பாலம் அமைக்கப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவி தலைமையில். மதுரை கே.எஸ் நிறுவனத்தினர் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கினர். நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் வடிவேல்குமரன், உதவி இன்ஜினியர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, புதிய பாலம் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். பாலத்துடன் கூடிய சாலைக்கு தடுப்பு சுவர், சென்டர் மீடியன், மழை நீர் வடிகால் போன்ற அனைத்து வசதிகள் கொண்ட பாலமாக கட்டப்படும் என, கோட்டப்பொறியாளர் ரவி தெரிவித்தார்.